Top world news stories and headlines detail

பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பது பற்றிய இரண்டாம் கட்ட, 'பிக் பாங்' (பெருவெடிப்பு) பரிசோதனை வெற்றியடைந்துள்ளது.'அணுக்கள் ஒன்று திரண்டு ஒரு பந்து போல இருந்த போது, அதில் திடீரென ஏற்பட்ட பெரிய வெடிப்பினால் அந்த அணுக் கூட்டம் சிதறி பரவ ஆரம்பித்தது. அதனால் ஏற்பட்டதே இந்த பிரபஞ்சம். இப்போதும் அந்த வெடிப்பினால் இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.


குறிப்பிட்ட சில கோடி ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் இந்த பிரபஞ்சம் பழைய நிலைக்கு அதாவது மீண்டும் ஒன்று திரண்டு விடும்' என்பது தான், நவீன அறிவியலில் இந்த பிரபஞ்சம் தோன்றியதற்கு கூறும் காரணம். இந்தக் கொள்கை புதிய அறிவியலில், 'பிக் பாங் தியரி' (பெருவெடிப்புக் கொள்கை) எனப்படும்.இந்த பெருவெடிப்புக் கொள்கையைப் பரிசோதிப்பதற்காக, பிரான்ஸ் - சுவிட்சர்லாந்து எல்லையில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில், அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பியக் கூட்டமைப்பான, 'செர்ன்' (சி.இ.ஆர்.என்.,), பூமிக்கடியில் 27 கி.மீ., அளவில் ராட்சத சுரங்க வடிவிலான ஒரு பரிசோதனைக் கூடத்தை அமைத்துள்ளது. காந்த ஈர்ப்பு முறையில் அமைந்த இதில், அணுக்கள் மோதும் போது ஏற்படும் பிரம்மாண்ட சக்தி மதிப்பிடப்படும்.


இந்தக் கூடம், 'லார்ஜ் ஹெட்ரான் கொலைடர்' எனப்படும். கடந்த ஆண்டில், இந்தக் கூடத்தில் பெருவெடிப்புக் கொள்கையின் அடிப்படையில் அணுக்களில் உள்ள துகள்களை மோதவிட்டு முதற்கட்டப் பரிசோதனை நடத்தப்பட்டது.இந்நிலையில், புதிய அறிவியலில் பிரபஞ்சத் தோற்றம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதத்தில் இரண்டாம் கட்ட சோதனை நடந்தது. அந்தச் சோதனை வெற்றியடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதைத் தொடர்ந்து, 'செர்ன்' அமைப்பின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள், சோதனை வெற்றியடைந்ததைக் கொண்டாடும் வகையில் பலமாகக் கைதட்டினர்.


இந்த வெற்றி, புதிய அறிவியலில் இயற்பியல் துறையில் பல்வேறு புதிய பரிமாணங்களை வளர்க்கும் என்று நம்பப்படுகிறது. ஒரே நாளில் இதற்கான விடை தெரியாது. காலப்போக்கில் அணுக்கூறுகள் மோதும் போது ஏற்படும் சக்திகள் குறித்த ஆய்வின் முடிவில், பிரபஞ்சம் பற்றிய அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்படும். வரலாற்றுப் பூர்வமான பிரம்மாண்டமான தகவல் சேகரிப்பு இதன் மூலம் துவங்கியது என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர் .

Free marital sex : kushboo interview
திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வது தவறு இல்லை என்று குஷ்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. நடிகை குஷ்பு 2005ம் ஆண்டு இந்தியா டுடே இதழுக்கு அளித்த பேட்டியில் திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் குறித்து விரிவாக பேசியிருந்தார். அவரது பேச்சு அன்றைய தினம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இருப்பினும் தனது கருத்தில் விடாப்பிடியாக இருந்த குஷ்பு, இதுதொடர்பான வழக்கை சந்தித்து வந்தார். குஷ்பு பேச்சு சரியா, தவறா? என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு பிரச்னை ‌பூதாகரமாக வெடித்தது.

அப்படி என்னதான் பேசினார் குஷ்பு? இதோ முழு விவரம்:-

பெண்கள் தங்கள் செக்ஸ் விருப்பங்களை வெளியிடுவதில் பெங்களூரை விட சென்னை பின் தங்கியிருந்தது. இப்போது சென்னை பெண்களும் செக்ஸ் பற்றிய மனத்தடைகளை கடந்து வருகின்றனர். செக்ஸ் பற்றி பெண்கள் வெளிப்படையாக பேச முடிகிறது. ஒரு பெண் தனது பாய் பிரண்ட் பற்றி உறுதியாக இருக்கும்போது அதை தன் பெற்றோரிடம் சொல்லலாம். தங்களது பெண் சீரியஸான ஒருஉறவை வைத்திருக்கும்போது அதை பெற்றோர் அனுமதிக்க வேண்டும்.

ஒரு பெண் திருமணம் ஆகும்போது அவள் கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம்விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண் மகனும், தான் திருமணம் செய்யப் போகும் பெண் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும் பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

நான் காதலித்த நபரையே திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் எங்கள் உறவு குறித்து நிச்சயமாக இருந்ததால் திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழ்ந்தோம். இப்போது எங்களுக்கு இரண்டு குழந்தைகள். குழந்தைகள் எங்களுடனேயே தூங்குவதால் எங்களுக்கென்று நாங்கள் தனியாக நேரத்தை ஒதுக்க வேண்டிருக்கிறது. மண வாழ்வில் ஈடுபடும் பெண்ணும் ஆணும் ஒருவருக்கு ஒருவர் உடல்ரீதியாகவும் மகிழ்ச்சியளிக்க வேண்டும். ஒருவரை ஒருவர் முழுமையாக திருப்தியடைய செய்வதுதான் ஆனந்தம். சில தம்பதிகள் செக்ஸ் புத்தகங்கள், படங்களைப் பார்த்து இன்பத்தை பெருக்கிக் கொள்கின்றனர். அதை தவறு என்று சொல்ல முடியாது. பெண்கள் தங்கள் செக்ஸ் விருப்பங்களைப் பேசினால் அவர்களைத் தவறானவர்களாகப் பார்க்கும் ஆண்களின் கண்ணோட்டம் மாறவேண்டும்.

இவ்வாறு குஷ்பு கூறியிருந்தார்.

குஷ்பு இந்த பேட்டி மூலம் தமிழ் கலாச்சாரத்தையும், தமிழ் பெண்களையும் இழிவு படுத்தி விட்டார், அவமானப்படுத்தி விட்டார் என்று பல பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. குஷ்புவுக்கு எதிராக பல போராட்டங்கள் நடந்தன. குஷ்புவை தமிழ்நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்றெல்லாம் கோஷமிடப்பட்டன.

குஷ்பு பேசியது சரியா, தவறா? அவரது பேச்சு கலாச்சாரத்துக்கு எதிரானதா, இல்லையா? என்பது குறித்த வழக்கில்தான் சுப்ரீம்கோர்ட் அதிரடி தீர்ப்பை வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.




Top world news stories and headlines detail

சென்னை : யுவராஜ் சிங் தனக்கு தம்பி மாதிரி என, பஞ்சாப் அணியின் உரிமையாளரும் பாலிவுட் நடிகையுமான பிரித்தி ஜிந்தா அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் 'மன்மதன்' என வர்ணிக்கப்படுபவர்யுவராஜ். இவரது வலையில் கிம் சர்மா முதல் தீபிகா படுகோனே வரை, நிறைய பாலிவுட் நட்சத்திரங்கள் சிக்கியுள்ளனர். இந்த முறை ஐ.பி.எல்., கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன்பதவியில் இருந்து நீக்கப் பட்டார். பின் புதிய கேப்டனாக சங்ககரா நியமிக்கப் பட்டார். இதனால் அதிருப்தியடைந்த யுவராஜ் கூறுகையில்,''அணியின் முக்கிய கேப்டன் பிரித்தி ஜிந்தா தான். கிரிக்கெட் தொடர்பாக நிறைய கற்றுக் கொண்டுள்ளார். ஒரு குடும்பம் போல அணியை பார்த்துக் கொள்கிறார். வீரர்களுக்கு சிறந்த உணவு, மற்றும் உரிய பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்கிறார். அனைவரும் சகோதரியாக பார்த்தாலும், நான் மட்டும் அப்படி நினைக்கவில்லை,'' என, நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

இதையடுத்து யுவராஜ்(28)-பிரித்தி ஜிந்தா(35) தொடர்பாக அதிகம்கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் மிகவும் நெருக்கமாகபழகுவதாக கூறப்பட்டது. இதனை கேட்ட பிரித்தி ஆவேசமடைந்தார்.

இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளில் பஞ்சாப் அணி தோல்வி அடைய, 'கட்டிப்புடி வைத்தியத்தை' கைவிட்ட இவர் கூறுகையில்,''தப்பா பேசாதீங்க ப்ளீஸ்... யுவராஜ் எனக்கு தம்பி மாதிரி. பஞ்சாப் அணி எனது குடும்பம் போன்றது. நாங்கள் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்கிறோம். அவ்வளவு தான்,''என்றார்

Mallika sherawat speaks about glamour
நான் உடலை மறைத்து இழுத்து போர்த்திக் கொண்டு நடித்தால் அந்த படம் ஓடாது, என்று கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார். பாலிவுட்டின் கவர்ச்சி புயல் மல்லிகா ஷெராவத் மும்பையில் ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், நான் படிப்பை முடித்ததும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டேன். அதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நான் அவர்களை விட்டு பிரிந்து வந்து தனியாக வசித்தேன். அப்போது முன்னணி டைரக்டர்கள், தயாரிப்பாளர்களிடம் சென்று “சான்ஸ்” கேட்டேன். அவர்கள் என் முகத்தைப் பார்த்து நடிகைக்கான தகுதி இல்லை என்று நிராகரித்தனர். ஆனாலும் நான் முயற்சியை கைவிடவில்லை. என்னிடம் இருந்த நகைகள் அனைத்தையும் விற்று செலவு செய்தேன். அதுவும் காலியான பிறகுதான் போட்டோ கிராபர் பரூக் பாட்டியா எனக்கு அறிமுகமானார். அவர் எனது முகஅழகுக்கு முக்கியம் தராமல் உடல் தோற்றத்தை மிடுக்காக படம் பிடித்தார்.

அந்த போட்டோக்களுடன் பட நிறுவனங்களுக்கு சென்று வாய்ப்பு கேட்டேன். அப்போது “குவாலிஸ்” என்ற படத் தயாரிப்பாளர் எனது உடல் அழகைப் பார்த்து வாய்ப்பு கொடுத்தார். படம் ஓரளவு வெற்றி பெற்றது. இதற்கு அடுத்து “மர்டர்” என்ற படத்தில் நடித்தேன். இப்படம் அபார வெற்றி பெற்றதுடன் லட்சக்கணக்கான ரசிகர்களை எனக்கு பெற்றுத் தந்தது. இப்போதெல்லாம் நடிகைகள் உடலை மறைத்து நடித்தால் படம் ஓடாது. இருக்கிற அழகை வெளிக்காட்டினால்தான் ஓடும். ரசிகர்களும் முக அழகை விட உடல் அழகுக்குதான் முக்கியத்துவம் தருகிறார்கள். நான் எந்த நடிகையையும் போட்டியாக கருதவில்லை. இதனால் பொறாமை என்ற பேச்சுக்கே என்னிடம் இடம் கிடையாது, என்று கூறியுள்ளார்

இலங்கை சிறையில் தண்டனை அனுபவித்து வரும் விடுதலைப் புலி ஒருவர், தனது காதலியை, சிறை வளாகத்திலேயே அதிகாரிகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.இலங்கையைச் சேர்ந்தவர் ராமைய்யா ரவீந்திரன்(38); விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர். சட்ட விரோதச் செயலுக்காக கைது செய்யப்பட்ட இவருக்கு இலங்கை கோர்ட், பத்து ஆண்டுகளுக்கு முன் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனை, பின்னர் 15 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. இதையடுத்து, கொழும்பு அருகே உள்ள வெலிக்கடை சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.ரவீந்திரனின் பள்ளித் தோழி ரஞ்சனி. இவர், ரவீந்திரனை நீண்ட நாளாக காதலித்து வந்தார். இருந்தாலும், ரவீந்திரன் சிறையில் இருந்ததால், அவரை திருமணம் செய்ய முடியவில்லை.

இந்நிலையில், சிறை அதிகாரிகளிடம் திருமணம் செய்வதற்கு முறையான அனுமதி பெற்றார்.இதையடுத்து, வெலிக்கடை சிறையில் ரவீந்திரனுக்கும், ரஞ்சனிக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது ரவீந்திரன் வெள்ளை உடையும், ரஞ்சனி நீல நிற புடவையும் உடுத்தியிருந்தனர். ரஞ்சனியின் கழுத்தில், ரவீந்திரன் தாலி கட்டினார். சிறை அதிகாரிகள், செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.ரவீந்திரனுக்கு 2015ம் ஆண்டோடு தண்டனைக் காலம் முடிவடைகிறது. அதற்கு பின், ரஞ்சனியும், ரவீந்திரனும் மண வாழ்க்கையை தொடரவுள்ளனர்

Swamy Nithyananda, to make movie for revival of his fame
நடிகையுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சைகளை சந்தித்திருக்கும் சாமியார் நித்தியானந்தா இதுவரை நான்கைந்து பேட்டிகளை கொடுத்து விட்டாலும், பத்திரிகையாளர்கள் முன் தோன்றி விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. அதேபோல சாமியாருடன் நெருக்கமாக இருந்த நடிகை ரஞ்சிதாவும் இந்த விவகாரம் குறித்து பேச பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. இருவரும் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல் ரகசியமாக இருந்தாலும், இந்த விவகாரம் குறித்த செய்திக்கு பஞ்சமில்லை.

இப்போது நித்தியானந்தர் குறித்து வெளியாகியிருக்கும் செய்தி கொஞ்சம் சுவாரஸ்யமானது. புகழின் உச்சியில் இருந்த நித்தியானந்தர், சர்ச்சைக்குரிய வீடியோவால் ஒரே நாளில் பல பக்தர்களின் மனதில் இருந்து ஓரம் கட்டப்பட்டது என்னவோ நிஜம்தான். சரிந்த புகழை தூக்கி நிறுத்தும் வகையில் சினிமாப்படம் ஒன்றை எடுக்க நித்தியானந்தர் ஆசிரமம் முயன்று வருகிறதாம். இதற்காக பெரிய அளவில் பணம் ஒதுக்க திட்டமிட்டிருக்கும் ஆசிரமம், இப்போதும் தங்களுடன் தொடர்பில் இருக்கும் சினிமா பிரபலங்களிடம் இந்த விஷயத்தை சொல்லி சரியான இயக்குனரை தே‌டிக் கொண்டிருக்கலாம். நித்தியானந்தரின் புகழை பறைசாற்றும் வகையில் உருவாகவிருக்கும் இப்படத்தில், நிஜமாகவே நித்தியானந்தர் இடம்பெறும் பிரசங்க, அருளாசி காட்சிகளும் இடம்பெறவிருக்கின்றனவாம்.

அதேநேரம் நித்யானந்தர் விவகாரத்தையே சினிமாவாக்கவும் இன்னொரு தரப்பு முயன்று வருகிறது. இதற்காக இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? என்று ஆராய்ச்சி வேறு நடந்து கொண்டிருக்கிறதாம். இந்த இரண்டு சினிமாக்கள் பற்றிதான் கோடம்பாக்கத்தில் பரபர டாக் ஓடிக் கொண்டிருக்கிறது. 2 படங்களும் ஒரே நேரத்தில் வந்தால் எந்த படம் வெற்றி பெறும் என்பது பற்றியும் கோலிவுட்டில் பட்டிமன்றமே நடந்து வருகிறது

எந்த நடிகையைப் பார்த்தாலும் உடனே நிருபர்கள் கேட்கும் ரெடிமேட் கேள்வி நித்யானந்தா- ரஞ்சிதா விவகாரம் குறித்துதான்.

தமிழே தெரியாத தமன்னாவாக இருந்தாலும் சரி, தமிழ் தெரிந்தும் தெரியாத மாதிரி நடிக்கும் த்ரிஷாவாக இருந்தாலும் சரி... முதல் கேள்வியாக ரஞ்சிதாவின் பலான மேட்டர் பற்றித்தான் கேட்பதென்று முடிவு செய்துவிட்டார்கள் போலிருக்கிறது.

கவர்ச்சி நடிகை சோனாவிடமும் நேற்று அதே கேள்வியை வீசினர்.

சொந்தமாக படம் தயாரிக்கிறாராம் சோனா. இந்தப் படத்துக்காக சில நிருபர்களை அழைத்து 'கவரேஜ்' பண்ணச் சொல்லியிருக்கிறார்.

அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று, ' செக்ஸ் புகாருக்குள்ளான நித்யானந்தா சாமியார்-ரஞ்சிதா பற்றி உங்கள் கருத்து என்ன?'

இதற்கு பதிலளித்த சோனா, "அதில் என்ன தப்பு இருக்கு? இருவரும் விருப்பப்பட்டுத்தானே அப்படி நடந்து கொண்டார்கள். அது அவர்கள் விருப்பம். அதுபற்றி மேற்கொண்டு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை..." என்றார்.

"உங்களை திருமணம் செய்துகொள்வதற்கு நிறைய பேர் ஆசைப்படுவதாக முன்பு கூறியிருந்தீர்கள். உங்கள் கணவரை தேர்ந்தெடுத்து விட்டீர்களா?" என்று கேட்டதற்கு,

"இனிமேல் நான் ஆண்களை நம்ப மாட்டேன். எல்லோருமே காரியவாதிகள். நான் ஒளிவு மறைவு இல்லாதவள். திறந்த மனதுடன் பேசுபவள். என்னை எந்த ஆணும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். யாராவது என்னிடம் வந்து, 'நீங்க அழகா இருக்கீங்க (?!)' என்று வழிந்தால், நான் கண்டுகொள்வதில்லை. ஏறக்குறைய ஞானி ஆகிவிட்டேன்..." என்றார்.

சினிமாவிலும் நிஜத்திலும் இனி சேலை கட்டவே விரும்புகிறாராம் சோனா... பெரிய கலாச்சாரப் புரட்சிதான்!

நித்யானந்தாவுக்கு நான் சேவைதான் செய்தேன். காலைப் பிடித்துவிடுவதும், மாத்திரை கொடுப்பதும், சாப்பிட உணவு கொடுப்பதும் தவறா.. அதில் ஏதேதோ சேர்த்து நீலப்படமாக்கிவிட்டார்கள்!, என்று ஆவேசப்பட்டுள்ளார் நடிகை ரஞ்சிதா.

நித்யானந்த சாமியாருடன் ரஞ்சிதா படுக்கையில் உருண்டு புரண்ட காட்சிகள் தொலைக்காட்சியில் வெளியாகி, போலிச் சாமியாரின் முகத்திரையை விலக்கிக் காட்டியது.

இந்த வீடியோ வெளியான கையோடு சாமியாரும் ரஞ்சிதாவும் தலைமறைவாகிவிட்டனர்.

கும்பமேளாவில் சாமியார் இருப்பதாக அவரது ஆசிரமத்தினர் கூறியுள்ளனர். வீடியோவில் சாமியாருடன் இருப்பவர் ரஞ்சிதாதான் என்றும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

ரஞ்சிதா எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்தது. இப்போது அவர் கேரளாவில் ரகசிய இடமொன்றில் தங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. அவர் செல்போன் மூலம் குமுதம் ரிப்போர்டர் இதழுக்கு பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

அந்த வீடியோவில் இருப்பது நீங்கள்தானே?

ஆமாம். நான்தான். ஆனால் அதை மிகைப்படுத்தி ஏதேதோ சேர்த்துள்ளனர். எனக்கு நித்யானந்தர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. அது ஊருக்கே தெரியும். அவரது கொள்கைகள், ஆன்மீக உரைகளால் கவரப்பட்டவள் நான். எனக்கு பல ஆண்டுகளாக இருந்த வீஸிங் தொல்லையை ஒரே நாளில் குணப்படுத்தியவர் அவர்... அன்று முதல் அவரது பக்தை ஆகிவிட்டேன்...

அந்த ஆபாச காட்சிகள்...

காலைப் பிடித்து விடுவதும் மாத்திரை கொடுப்பதும் உணவு தருவதும் ஒரு பணிவிடைதானே.. அத்துடன் ஏதேதோ சேர்த்து ஒரு நீலப்படம் அளவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.

சாமியாரை மிரட்டி பணம் பறிக்கத்தான் இப்படிச் செய்தீர்களாமே?

நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவள். பணத்துக்காக நானே இப்படியெல்லாம் படமெடுத்தேன் என்று மீடியா சொல்வதை என்னால் தாங்க முடியவில்லை. பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. எந்த ஒரு பெண்ணாவது தன்னைத்தானே இப்படி எடுத்துக் கொள்வாளா?

உங்கள் கணவர் ராகேஷை ஏன் விவாகரத்து செய்தீர்கள்?

பத்திரிகை- டிவிக்களில்தான் இப்படி சொல்கிறார்கள். ஏன் இப்படி? எனக்கும் என் கணவருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை.

நடந்த உண்மையை வெளிச்சத்துக்கு வந்து நீங்களே சொல்லலாமே?

அதான் இப்போது சொல்லிட்டேனே... நித்யானந்தா மகாஞானி. அடுத்த இரண்டு வாரங்களில் எல்லாவற்றையும் விவரமாகச் சொல்வார். தயவு செய்து மீடியாக்கள் என்னை மேலும் காயப்படுத்தாதீர்கள்..."

-இவ்வாறு கூறியுள்ளார் ரஞ்சிதா















2009-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்துக்கு மூன்று விருதுகள் மட்டுமே கிடைத்தன. ஆனால் கேமரூனின் முன்னாள் மனைவி கேதரின் பிக்லோ இயக்கிய, தோல்விப் படம் என்று அறிவிக்கப்பட்ட தி ஹர்ட் லாக்கருக்கு சிறந்த படம், சிறந்த இயக்கம் உள்ளிட்ட 6 விருதுகள் கிடைத்துள்ளன.

சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த எடிட்டிங், சிறந்த சவுண்ட் எடிட்டிங், சிறந்த சவுண்ட் மிக்ஸிங், சிறந்த ஒரிஜினல் ஸ்கிரீன்பிளே ஆகிய 6 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அவதார் திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்கம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்கம் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸுக்கான விருதுகள் மட்டுமே அவதாருக்கே கிடைத்தன.

சிறந்த நடிகருக்கான விருது க்ரேஸ் ஹார்ட் படத்தின் நாயகன் ஜெஃப் பிரிட்ஜஸுக்குக் கிடைத்தது.

சிறந்த நடிகைக்கான விருது தி ப்ளைண்ட் சைட் பட நாயகி சான்ட்ரா புல்லக்குக்கு வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகைக்கான விருது நோ நிக்கிக்கும், சிறந்த துணை நடிகருக்கான விருது கிறிஸ்டோபர் வால்ட்ஸுக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த படத்துக்கான விருதுகள் அவதாருக்கே கிடைக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவை தி ஹர்ட் லாக்கருக்கு கிடைத்தது பார்வையாளர்களை அதிர வைத்தது. ஜேம்ஸ் கேமரூன் முகத்தில் அந்த ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது!

2009ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் விவரம்:

சிறந்த நடிகர்: ஜெப் பிரிட்ஜஸ், படம்: க்ரேஸி ஹார்ட்
சிறந்த நடிகை: சான்ட்ரா புல்லக், படம்: தி ப்ளைண்ட் சைட்

சிறந்த படம்: தி ஹர்ட் லாக்கர்
சிறந்த இயக்கம்: கேதரின் பிக்லோ, படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த துணை நடிகர் - கிறிஸ்டோபர் வால்ட்ஸ். படம்: இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்

சிறந்த துணை நடிகை - மோ நிக்கி, படம்: பிரிஸியர்

சிறந்த அனிமேஷன் படம்: அப்

சிறந்த கலை இயக்கம்: ரிக் கார்ட்ர், ராபர்ட் ஸ்ட்ராம்பர்க் (கலை இயக்கம்), கிம் சின்க்ளேர் (செட் அலங்காரம்), படம்: அவதார்

சிறந்த ஒளிப்பதிவு: மோரோ பியரோ, படம்: அவதார்

சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ்: ஜோ லெட்டரி, ஸ்டீபன் ரோஸன்பாம், ரிச்சர்ட் பென்ஹேம் மற்றும் ஆண்ட்ரூ ஆர் ஜோன்ஸ், படம்: அவதார்

சிறந்த டிசைனிங்: சாண்டி பாவல், படம்: தி யங் விக்டோரியா

சிறந்த டாகுமெண்டரி படம்: தி கோவ் (லூயி ஸியோஸ் மற்றும் பிஷர் ஸ்டீவன்ஸ்)

சிறந்த டாகுமெண்டரி (குறும்படம்): மியூசிக் பை ப்ரூடென்ஸ் (ரோஜர் ரோஸ் வில்லியம்ஸ் மற்றும் எலினார் பர்கெட்)

சிறந்த எடிட்டிங்: பாப் முராவ்ஸ்கி - கிறிஸ் இன்னிஸ், படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த வெளிநாட்டு மொழிப் படம்: தி ஸீக்ரெட் இன் தேர் ஐஸ் (El Secreto de Sus Ojos), அர்ஜன்டைனா, இயக்கம்: ஜான் ஜோஸ் காம்பெனல்லா

சிறந்த மேக்கப்: பார்னி பர்மன், மின்டி ஹால் மற்றும் ஜோயல் ஹர்லோ

சிறந்த இசை: மைக்கேல் ஜியாசினோ, படம்: அப்

சிறந்த இசை (ஒரிஜினல் ஸ்கோர்): இசை - பாடல்: ரையன் பிங்காம் மற்றும் டி போன் பர்னட், படம்: க்ரேஸி ஹார்ட்

சிறந்த சவுண்ட் எடிட்டிங்: பால் என்ஜோ ஒட்டோசன், படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த சவுண்ட் மிக்ஸிங்: பால் என்ஜோ ஒட்டோசன் - ரே பெக்கட், படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த ஒரிஜினல் ஸ்க்ரிப்ட்: மார்க் பால், படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த குறும்படம்: தி நியூ டெனன்ட்ஸ், இயக்கியவர்: ஜோக்கிம் பேக் - டிவி மேக்னஸ்ஸன்

சிறந்த அனிமேஷன் குறும்படம்: லோகரோமா, இயக்கம்: நிகோலஸ் ஷ்மெர்கின்.

Tamil Actress Womens day message
ஈகோ இல்லாமல் பெண்களை சரிசமமாக பார்க்க வேண்டும் என்றும், பெண்களை அரவணைத்து செல்ல வேண்டும் என்றும் நடிகைகள் கூறியுள்ளனர். ஆண்டுதோறும் மார்ச் 8ம்தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று 100வது ஆண்டு மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மாதராய் பிறந்து திரையுலகில் சாதித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் மகளிர் தினத்தையொட்டி தினமலர் டாட் காம் வாசகர்களுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளனர்.

ரம்பா

ஒவ்வொரு நாளும் மகளிர் தினம்தான். அம்மா, தங்கை, மஜைவி, அக்கா இப்படி எந்த பெண் உறவாக இருந்தாலும் காலையில் காபி கொடுக்குறதுல தொடங்கி, ஒவ்வொரு ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள். இந்தியாவில் மார்ச் 8ம்தேதி பெண்கள் தினம் கொண்டாடுவதில் பெருமையா இருக்கு. எனக்கு இந்திராகாந்தியை ரொம்ப படிக்கும். அவங்க பெஸ்ட் வுமன். அடுத்து என் அம்மாவ ரொம்ப பிடிக்கும். அவங்க இல்லன்னா இன்னிக்கு இந்த ரம்பா இல்லை. அதனால பெண்ணா பிறந்ததுக்கு பெருமைப்படுறேன். உலகத்தில் இருக்குற எல்லா பெண்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

த்ரிஷா

எனக்கு எல்லா நாளும் பெண்கள்தினம்தான். எனக்கு வீட்ல, வெளில நல்லா சப்போர்ட் இருக்கு. அதனால்தான் நிறைய வேலை செய்ய முடியுது. அம்மா என்னுடைய தேவைகள் எல்லாத்தையும் கவனித்துக் கொள்வதால் நடிப்புத் துறையில் சரியாக செல்ல முடிகிறது. வேலையை சந்தோஷமாக செய்ய முடிகிறது. இதுவரைக்கும் எனக்கு பெரிய பிரச்னை எதுவும் இருந்ததில்லை. என் வாழ்க்கையில் குறைபடும்படியா எதுவும் இல்லை. பெண்கள் முன்னேறி நிறைய சாதிக்கணும். நாட்டுக்கே பெருமை சேர்க்கணும்.

ப்ரியாமணி

முதல்ல பெண்களா பிறந்ததுக்கு பெண்கள் எல்லாரும் பெருமைப்படணும். இப்ப இருக்குற காலகட்டத்துல ஆணுக்கு நிகரா, எல்லா துறைகளிலும் பெண்கள் இருக்காங்க. உதாரணத்துக்கு கல்பனா, சுனிதா, சானியா மிர்சா... இப்படி நிறைய வெற்றி பெற்றவர்களை சொல்ல முடியும். உலக அளவில் நம் பெருமையை எடுத்துட்டு போயிருக்காங்க. நம்மாலும் சாதிக்க முடியும்னு வெற்றிய கொடுத்திருக்காங்க. ரொம்ப பெருமையா இருக்கு. வாய்த்துக்கள். நிறைய பெண்கள் தைரியமா வெளில வந்து சாதிக்கணும்.

மீனாட்சி

என்னை பொறுத்தவரைக்கும் இன்னும் எங்காவது ஒரு இடத்தில் ஆணாதிக்கம் இருக்கத்தான் செய்கிறது. விரைவில் இதெல்லாம் மாறும்னு நினைக்கிறேன். ஈகோ, தான் என்பதெல்லாம் இல்லாமல் பெண்களை அரவணைத்து செல்ல வேண்டும். ஆண்கள் இல்லன்னா பெண்கள் இல்லை. அவங்களால எதையும் தனியா சாதிக்க முடியாது. நான் பெண்ணா ‌பிறந்ததற்கு ‌ரொம்ப சந்தோஷப்படுறேன். பெருமைப்படுறேன். அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்.

சந்தியா

நாங்க ஜெயிச்சிட்‌டோம், சாதிச்சிட்டோம்னு எல்லாம் பெண்கள் சொல்லிக் கொண்டாலும், இந்தியாவில் பெண்கள் இந்த அளவு வெளியே வர ஆண்கள்தான் காரணம். சமுதாயத்தில் பெண்களும் நல்ல நிலைக்கு வரணும்னு ஆண்கள் விரும்புறாங்க. என் குடும்பத்தில் எனக்கு அப்பாவும், அண்ணாவும் ரொம்ப உதவுறாங்க. அதனால்தான் சந்தியாவா, என்னால இந்த துறைக்கு வர முடிந்தது. ஒவ்வொரு குடும்பத்திலும் அப்பா, அண்ணா, கணவர் என் எல்லாரும் உதவி செய்தால் பெண்கள் நிறைய சாதிக்க முடியும்னு நம்புறேன்.

சானாகான்

பெண்கள்னா ஒரு பவர் இருக்குன்னு நான் நினைக்கிறேன். எல்லா இடங்களிலும் பெண்கள் இருக்காங்க. ஒரு குடும்பத்தில் கண்ட்ரோல் பாயிண்ட் அந்த வீட்டில் இருக்கும் பெரிய பாட்டிதான்னு சொல்வேன். பெண்களுக்கு மிகப்பெரிய மரியாதை இங்கே இருக்கு. பெண்களுக்கு இப்ப நிறைய விழிப்புணர்வு வந்திருக்கு. யாரும் வீட்டில் சும்மா இருக்க விரும்புறதில்லை. எனக்கு எங்க அம்மாவோட சப்போர்ட் ரொம்பவே இருக்கு. அது மாதிரி எல்லா பெண்களுக்கும் ஒரு சப்போர்ட் தேவைப்படுது. இந்த தினத்தில் ஆண்கள்கிட்ட கேட்டுக்கிறேன். ஈகோ இல்லாம எல்லோரையும் சரி சமமா பாருங்க. நன்றி! வாழ்த்துக்கள்!

பெங்களூரு: தம் மீது வேண்டும் என்றே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நான் எந்த தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை. தவறான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆணித்தரமான ஆதாரங்களை திரட்டி வருகிறேன் என்றும் இதனை நான் மக்கள் முன் திறந்து வைக்கிறேன் என்றும் செக்ஸ் புகாரில் சிக்கிய நித்தியானந்தர் வீடியோ மூலம் செய்தி அனுப்பியுள்ளார். இவ்வளவு அவதூறு இருந்தும் இவருக்கு உலகம் முழுவதும் இருந்து பெரும் அளவில் ஆதரவு குவிந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.



நடிகை ரஞ்சிதாவுடன் இவர் இணைந்திருந்த காட்சிகள் டி.வி.,யில் ஒளிபரப்பான விஷயம் நாடு முழுவதும் உள்ள இவர்களது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர் எங்கே இருக்கிறார் என இரு மாநில போலீசார் இவரை தேடி வரும் வேளையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டிருப்பது மேலும் நித்தியானந்தரின் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



பக்க பலமாக இ. மெயில்கள் குவிகிறது: இந்த வீடியோவில் நித்தியானந்தர் பேசியிருப்பதாவது: நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை.என ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறேன். நானோ எனது தியான பீடமோ எவ்வித தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை. என்பதை ஆழமாக சொல்ல விரும்புகிறேன். எனது சோதனையான இந்த காலக்கட்டத்தில் எனது சிஷ்யர்கள், எனது நல விரும்பிகள் எனக்கு உலகம் முழுவதும் பக்கப்பலமாக இருந்து வருகின்றனர். இக்கட்டான காலத்தில் வெளிநாடுகளில் இருந்து எனக்கு இ மெயில் மூலம் ஆதரவு தெரிவித்துள்ளனர். பலர் கடிதங்களை குவித்துள்ளனர். இவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.



நல் வித்துக்களை பரப்பியவன்: நான் கடந்த பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் நல் வித்துக்களை பரப்பியுள்ளேன். இதன் காரணமாக எனக்கு இந்த ஆதரவு இருக்கிறது. ஆணித்தரமாக சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். வதந்திகளையும், செய்திகளையும் அறிவீர்கள். நாங்கள் இது தொடர்பான செய்திகளையும், உண்மைகளையும் திரட்டி வருகி‌றேன். எல்லாவற்றையும் திரட்டி எல்லா உண்மைகளையும் நான் உங்கள் முன்பு திறந்து வைக்கிறேன். எல்லோரும் பொறுமையாக இருங்கள் , யாரும் தவறான முடிவுக்கு வர வேண்டாம். நான் சட்ட ரீதியான எவ்வித தவறும் செய்யவில்லை. எனக்கு ஆதரவாக இருந்து வரும் அனைவருக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



இந்த வீடியோ சி.டி.,க்கள் தியான பீடத்தின் மூலமாக பல செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரது மடத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திலும் இந்த வீடியோ அப் செய்யப்பட்டுள்ளது.



தன்னிலை விளக்க கடிதம்: மேலும் நி்த்தியானந்தரினன்அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ( அந்த ) வீடியோ தொடர்பாக ஒரு விளக்க கடிதமும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் ; களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, தொலைக்காட்சிகளில் சி்த்தரிக்கப்பட்டுள்ளது. பாதககத்தை ஏற்படுத்தும் கிராபிக்ஸ் அதி நவீன நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. என்றும் கூறப்பட்டுள்ளது.விரைவில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நித்தியானந்தர் உலக அளவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வாழ்வில் ஆழமான முன்னேற்றங்களை தந்தவர். இவரது கருணையை புரிந்தவர்களுக்கு மேலும் விளக்வுரை தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.


http://www.youtube.com/lifeblissfoundation#p/a/u/0/IO_6GkLekWY

I dont belive priests - Trisha
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றிக்காக பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், படத்தின் நாயகன் சிலம்பரசன், த்ரிஷா, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இதில் நிருபர்களுக்கு த்ரிஷா அளித்த பேட்டியின் போது சில நடிகைகள் ஆசிரமத்துக்கு சென்று சாமியாரிடம் ஆசி பெற்று வருகிறார்களே? நீங்கள் எந்த ஆசிரமத்துக்காவது சென்றிருக்கிறீர்களா? அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் ஆசிரமங்களுக்கு நான் போனதில்லை. நான் சாமியைத்தான் நம்புவேன், சாமியார்களை நம்புவதில்லை. கடவுளுக்கும், மனிதர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதெப்படி ஒரு சாதாரண மனிதன் கடவுளாக முடியும்... மனிதர்களை கடவுளாக நினைத்து காலில் விழுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முத்தக்காட்சியில் நடித்திருக்கிறீர்களே? கதைக்கு அது தேவைப்பட்டது. அதனால் நான் நடித்தேன். படத்தில் சிம்புவைவிட, வயதில் மூத்த பெண்ணாக நடித்திருக்கிறீர்களே? அதற்காக நான் இயக்குனருடன் சண்டை போட்டேன். அவர், என்னை சமாதானப்படுத்தினார். அப்படி ஒரு காம்பினேஷன் நல்ல க்யூட்டாகவும் இருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். கேரள கிறிஸ்தவப் பெண்கள் யாரையாவது பார்த்து அவர்கள் பழக்க வழக்கங்களை கற்றுக் கொண்டீர்களா? இல்லை. கௌதம் மேனன் சொன்னதைக் கேட்டு நடித்தேன். அவர் சொன்ன சில விஷயங்களில் எனக்கு முதலில் சம்மதமில்லை. ஆனால் கடைசியில் அவர் சொன்னதுதான் ஜெயித்தது, என்றார் த்ரிஷா

Actress Ranjitha is not a Member of Nadigar sangam : Sarathkumar
நடிகை ரஞ்சிதா தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினரே இல்லை என்று நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமார் கூறியிருக்கிறார். நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருந்த சி.டி., வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் சாமியாருடன் ரொம்பவே நெருக்கமாக இருந்த ரஞ்சிதா இப்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், சர்ச்சையில் ஒரு நடிகை சிக்கியிருப்பதால், நடிகர் சங்கம் என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்து வருகிறது.

நடிகைகள் எல்லோரும் உத்தமிகள் என்பதுபோல பேசி வந்த நடிகர்கள் எல்லாம் இந்த விவகாரம் குறித்து வாய் திறக்க மறுக்கிறார்கள். நடிகை புவனேஸ்வரி விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டபோது, செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்களை அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் திட்டித்தீர்த்த நடிகர்கள் ரஞ்சிதா விவகாரம் பற்றி எங்கே நம்மிடம் நிருபர்கள்‌ கேட்டு விடுவார்களோ என அஞ்சி நிருபர்களை சந்திப்பதையே தவிர்த்து வருகிறார்கள்.

சத்யராஜ், சுந்தர் சி இணைந்து நடித்திருக்கும் குரு சிஷ்யன் படத்தின் பிரஸ் மீட்டிற்கு சத்யராஜ் வருவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நிருபர்களும், சத்யராஜிடம் ரஞ்சிதா விவகாரம் பற்றி கேட்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் சத்யராஜ் அந்த மீட்டிங்கிற்கு வரவே இல்லை. இதேபோல பத்திரிகையாளர்களை ஈனப்பிறவி என்றும், நடிகைகளை பாதுகாப்பதற்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசிய சூர்யாவும், ரஞ்சிதா விவகாரத்தில் இன்னமும் வாய் திறக்கவில்லை.

நடிகர் சங்கம், சாமியாருடன் உல்லாசமாக இருந்து மாட்டிக் கொண்ட நடிகை ரஞ்சிதாவை காக்க சட்ட நடவடிக்கை எடுக்குமா? அல்லது அவரை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடம் ரஞ்சிதா விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. "அவர் நடிகர் சங்கத்தில் உறுப்பினரே இல்லை. அப்படியிருக்கும் போது அவரை எப்படி நாங்கள் நீக்க முடியும்?" என்று கூறியிருக்கிறார் சரத்குமார்.

நடிகை ரஞ்சிதா 1992ம் ஆண்டு வெளியான நாடோடி தென்றல் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். அதன் பிறகு கிழக்கு வீதி, பேண்டு மாஸ்டர், மதுரை மீனாட்சி, கேப்டன், அதர்மம், என் ஆசை மச்சான், ஜெய்ஹிந்த், வீட்டை பாரு நாட்டை பாரு, அமைதி படை, தோழர் பாண்டியன், பெரிய மருது, அத்தை மகள் ரத்தினமே, தொட்டில் குழந்தை, கருப்பு நிலா, தமிழச்சி, கர்ணா, சின்ன வாத்தியார், சீதனம், பாட்டு வாத்தியார், மக்கள் ஆட்சி, முஸ்தபா, புருஷன் பொண்டாட்டி, பகைவன், நிலவே உனக்காக, உரிம‌ை போர், நாக தேவி, தாஜ் மஹால், மையம், ஆஹா எத்தனை அழகு, சாசனம், அமிர்தம், மாய கண்ணாடி, ஓடும் மேகங்களே, பொம்மலாட்டம், அழகர் மலை உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவை தவிர மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள ரஞ்சிதா, கிருஷ்ணவம்சி, ரோஜா, தெக்கத்தி பொண்ணு ஆகிய டி.வி. தொடர்களிலும் நடித்திருக்கிறார்


மெல்போர்ன், மார்ச் 3: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இந்த ஆண்டு அக்டோபரில் ஓய்வு பெறப்போவதாக இலங்கை அணி வீரர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு புதன்கிழமை அளித்துள்ள பேட்டியில் முரளிதரன் இது குறித்து மேலும் கூறியுள்ளது:

÷நான் இன்னும் ஓரிரு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறேன். அக்டோபர் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடும் டெஸ்ட் போட்டிதான் எனது கடைசி சர்வதேச ஆட்டமாக இருக்கும். 2011-ம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரை ஒருநாள் கிரிக்கெட் விளையாடுவேன். ஓய்வு பெறும் முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று எண்ணியுள்ளேன் என்றார் அவர். தற்போது 37 வயதாகும் முரளிதரன், 132 டெஸ்ட் ஆட்டங்களில் 792 விக்கெட்டுகளையும், 334 ஒருநாள் ஆட்டங்களில் 512 விக்கெட்டுகளையும் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்

மார்ச் 4: ஐ.பி.எல். கிரிக்கெட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நியூசிலாந்து வீரர் ஜேக்கப் ஓரம் பங்கேற்கமாட்டார் என்று தெரிகிறது

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ஆடி வரும் ஓரம் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளார். இன்னும் ஒரு மாதத்துக்கு அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர் கூறியுள்ளனர். எனவே வரும் 12-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டியில் அவர் விளையாட மாட்டார்.

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஓரம் விளையாடி வந்தார். சிறந்த ஆஸ்ரவுண்டரான அவர் அணியில் இடம் பெறாதது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறிது பின்னடைவை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவதற்காக ஆண்டு சுமார் ரூ. 3.37 கோடிக்கு ஓரம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

"வரும் அக்டோபரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேன், ஒருநாள் மற்றும் 20-20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன்' என்று ஓரம் அண்மையில் அறிவித்தார்


கொல்கத்தா, மார்ச் 4: சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கருத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இது குறித்து மேலும் கூறியது:

சச்சின் தான் எப்போதும் பாரத ரத்னா. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பதில் எவருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கமுடியாது. அவரது சாதனைகளை கெüரவிக்கும் வகையில் அவருக்கு இந்த விருதை வழங்க வேண்டும். சுமார் 10 ஆண்டுகாலம் அவருடன் சேர்ந்து விளையாடியுள்ளேன்.

அவரைப் போன்ற ஒரு வீரர் இந்தியாவுக்கு கிடைத்தது நம் அனைவருக்கும் பெருமை அளிக்கும் விஷயம் என்றார் செüரவ் கங்குலி.

சானியா மிர்சா: கொல்கத்தா வந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கெüரவிக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்


சென்னை, மார்ச் 4: நித்யானந்தா இருப்பது போல தனியார் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியான படக்காட்சிகள் முற்றிலும் பொய்யானவை என அவரது மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்ம கிருபானந்தா, வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆகியோர் மறுத்துள்ளனர்.

இது தொடர்பாக இவர்கள் இருவரும் சென்னையில் கூட்டாக நிருபர்களிடம் கூறியது:

கிராபிக்ஸ் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ஒளிப்பதிவுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. நித்யானந்தத்தின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் இதை வெளியிட்டவர்கள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் தொலைக்காட்சியினர் தங்களுக்கு கிடைத்த படக்காட்சிகளில் இருப்பவர் நித்யானந்தாதானா என்பதை எங்களிடம் கேட்டு உறுதிப்படுத்தவில்லை. அந்த காட்சிகளில் இருப்பது நித்யானந்தா இல்லை.

முதல்நாளில் அதில் வரும் பெண்ணின் முகத்தை மறைத்து வெளியிட்டவர்கள் அடுத்தநாள் அவரது முகத்தை தெளிவாகக் காட்டினர். இதற்கு இடைப்பட்ட சமயத்தில் நடந்தது என்ன?

இந்த படக்காட்சிகள் யாரால், எங்கு, எப்போது, எதற்காக எடுக்கப்பட்டது என்பது குறித்து தனியார் தொலைக்காட்சி சார்பில் உறுதியான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அந்த படக்காட்சியில் இருப்பவர் நித்யானந்தா இல்லை. ஆனால், இதை இப்போதைய சூழலில் நிருபிக்கும் நிலையில் நாங்கள் இல்லை.

அடையாளம் தெரியாத சிலர் நித்யானந்தா வேறு பெண்களுடன் இருப்பது போல கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட படங்களை இ-மெயில் மூலம் அனுப்பி வந்தனர். இவ்வாறு அனுப்பி எங்களை தொந்தரவு செய்த கும்பலே இந்த சதியின் பின்னணியிலும் இருப்பார்கள் என தெரியவந்துள்ளது. அந்த கும்பலை கண்டுபிடிக்க வேண்டியது காவல் துறையின் பொறுப்பு.

கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ள நித்யானந்தா விரைவில் மக்கள் முன்பு தோன்றி இது தொடர்பாக உரிய விளக்கம் அளிப்பார் என்று அவர்கள் தெரிவித்தனர்

Ranjitha Issue : Tamil cine field keep silence
நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருக்கும் விவகாரம் கோலிவுட்டையை கதிகலங்க வைத்திருக்கிறது. ஏற்கனவே நடிகை புவனேஸ்வரி விவகாரத்தில் செய்தி வெளியிட்ட பத்திரிகையை அச்சில் ஏற்றமு‌டியாத அளவுக்கு கடுமையான வார்த்தைகளால் பேசி, திட்டித் தீர்த்தனர். நடிகைளுக்கு சட்ட பாதுகாப்பு தர வேண்டும் என்று கூட்டத்தில் பேசிய நடிகர் சூர்யா ரொம்பவே ஆவேசப்பட்டார். இப்போது நடிகை ரஞ்சிதா, சாமியார் ஒருவருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ள நிலையில் நடிகர் சங்கத்தின் ரீ-ஆக்ஷன் என்னவாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இதற்கிடையில் வீடியோ மூலம் கையும் களவுமாக சிக்கியுள்ள ரஞ்சிதா தவிர, பழம்பெரும் புன்னகையரசியின் தங்கை மகளாக அறிமுகமாகி மார்க்கெட் இழந்த சுதாராக நடிகை, தற்போது சின்னத்திரையில் அடைக்கலமாகி இருக்கும் யுகத்திற்கெல்லாம் ராணியாவ நடிகை என அரை டஜன் நடிகைகள் அந்த இளம் சாமியாருடன் சல்லாபித்த பட்டியலில் இருக்கிறார்களாம். எங்கே ரஞ்சிதா மாதிரி வீடியோ ஆதாரத்துடன் தங்களது வண்டவாளமும் தண்டவாளம் ஏறுமோ? எனும் பயத்தில் தங்களுக்கு நெருக்கமான நடிகர்கள் மூலம் சங்கத்தில் தர்பாருக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி வருகிறார்களாம். வீடியோ ஆதாரத்துடன் விஷயம் அம்புட்டும் வெளிவந்திருப்பதால் விபரீதம் உணர்ந்த சங்கம், செய்வதறியாது
கையை பிசைந்து கொண்டிருக்கிறதாம்! பாவம்!!

Front page news and headlines today


"ஏமாற்று வித்தைக்காரர்களையும், பக்தி வேடம் பூண்டு பாமர மக்களை படுகுழியில் தள்ளுகிற பகல் வேடக்காரர்களையும் அவர்களிடம் பலியாகி சமுதாயத்தைச் சீரழிக்கிற சபல புத்தி உடையவர்களையும் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது,'' என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.


இது தொடர்பாக, முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பகுத்தறிவு பிரசாரம் பல்லாண்டுகளாக நடந்து வரும் போதும், சாமியார்கள் குறித்த தெளிவு மக்களிடம் இன்னும் ஏற்படாமலேயே உள்ளது. சமூக நலனிலும், கண்ணியத்திலும் அக்கறை காட்டுகிற ஒரு மக்கள் நல அரசு, கயமைத்தன சாமியார்களின் ஏமாற்று வித்தைகளை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. இதுபோன்ற குற்றங்கள் நடைபெறும் போது, அவை எப்படி நடத்தப்பட்டன, எங்கே, யாரால் நடத்தப்பட்டன, எந்த முறையில் நடத்தப்பட்டன என்பதை சான்றாக காட்ட, காட்டப்படும் படங்கள், செய்திகள் அளவுக்கு மீறி விடுகிறது. அவற்றை படங்களாக பார்த்திடும் இளையோர் நெஞ்சங்களில் எத்தகைய மாறுதல்கள் ஏற்படும் என்பதையும், அது இளைய சமுதாயத்தை எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்பதையும் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஏமாற்று வித்தைக்காரர்களையும், பக்தி வேடம் பூண்டு பாமர மக்களை படுகுழியில் தள்ளுகின்ற பகல் வேடக்காரர்களையும் அவர்களிடம் பலியாகி சமுதாயத்தைச் சீரழிக்கிற சபல புத்தி உடையவர்களையும் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்

நடிகையுடன் செக்ஸ் விவகாரத்தால், தலைமறைவாக உள்ள நித்யானந்தா சாமியார், வெளிநாட்டிற்கு தப்பியோடி விட்டார் என்று கூறப்படுகிறது. நித்யானந்தா சாமியார் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் தலைமறைவாக உள்ளார் என்ற தகவல் பரவி வருவதால், பிடதி ஆசிரமத்தில், ராம் நகர் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். புகாரில் சிக்கியுள்ள நித்யானந்தா மீதும், அவர் ஆசிரமம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக அரசு கூறியுள்ளது.


பெங்களூரு அருகே பிடதி என்ற ஊரில் நித்யானந்தரின் தலைமை அலுவலகம் உள்ளது.பிடதியிலுள்ள நித்யானந்தா தியான பீடத்தில் நேற்றும் பரபரப்பு காணப்பட்டது. சாமியார் பற்றி பலரும் ஆவலுடன் விசாரித்து வருகின்றனர். ஆனாலும், எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. தியானபீடத்திற்கு சென்று ராம் நகர் மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தினார். அங்குள்ள சாமியாரின் சிஷ்யர்களிடம் சில மணி நேரம் விசாரணை நடத்தினார். இதன் பின்னர் கலெக்டர் கூறுகையில், ""நித்யானந்தா சாமியார் எங்கிருக்கிறார் என்று தெரியாவிட்டால், அவரது ஆசிரம சொத்துகள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். ஆசிரமத்தில் நேற்று முன்தினம் வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது, வளாகத்திலுள்ள குடிசைபோன்ற வீடுகள் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தன. இதில், பல மர்மங்கள் நீடிப்பதாக சிலர் தெரிவித்தனர். ஆசிரமத்தில் உள்ளவர்களே தீ வைத்து எரித்ததாகவும், இதன் மூலம் பல முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. தலைமறைவாக உள்ள நித்யானந்தா சாமியார், வெளிநாட்டிற்கு தப்பியோடி விட்டார் என்றும் கூறப்படுகிறது.சொத்துகளை முடக்க நடவடிக்கை: கர்நாடக சட்டசபை கேள்வி நேரத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா பேசுகையில், ""நித்யானந்தாவின் லீலைகள் வெளியாகியுள்ளன. காவி அணிந்து நடந்து கொண்டுள்ள விதம் ஆபாசமும், அசிங்கமும் ஆனது. அவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு, சொத்துகளை முடக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.



உள்துறை அமைச்சர் ஆச்சார்யா கூறியதாவது: நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து வனத்துறை அதிகாரிகள், 26 கிலோ சந்தனக் கட்டைகளை கைப்பற்றியுள்ளனர். ஆசிரமத்தில் மான், புலி தோல்கள் உள்ளதாக வந்த தகவல் கிடைத்ததன் பேரில், போலீசாரும், வனத்துறை அதிகாரிகளும் நேரில் சென்று சோதனையிட்டனர். ஆனால், அத்தகைய பொருட்கள் எதுவும் அங்கு கிடைக்கவில்லை. ஆசிரம சொத்தின் உரிமையாளர் குறித்து மாவட்ட கலெக்டரிடமிருந்து தகவல்கள் சேகரித்து, கூடுதல் நடவடிக்கை மேற் கொள்வோம். அவர் தலைமறைவாக இருப்பதுடன், அவர் எங்கிருக்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை. தமிழக போலீசாருடன் தொடர்பு கொண்டுள்ளோம். தேவையெனில், சட்டப்படி அவரது சொத்துகளை முடக்குவது உட்பட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஆச்சார்யா கூறினார்.



கர்நாடகா மேலவையில் சட்டத்துறை அமைச்சர் சுரேஷ்குமார் பேசியதாவது: பிடதியிலுள்ள நித்யானந்தா சொத்துகளை நிர்வகிப்பது எப்படி என்பது குறித்து விரைவில் அரசு சரியான நடவடிக்கை மேற்கொள்ளும். பிடதியிலுள்ள ஆசிரமம், பொதுமக்களின் சொத்தாக இருப்பதால், அதை எப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அரசு யோசித்து வருகிறது என்றார். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்ற பேதமின்றி, அனைவரும் நித்யானந்தா சாமியார் நடத்திய லீலைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்

நித்தியானந்த சாமியார் நடிகையுடன் இருக்கும் வீடியோ காட்சிகளை ஒளிபரப்ப தடை விதிக்க சென்னை சிட்டி சிவில் கோர்ட் மறுத்து விட்டது.

பிரபல சாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இதனால் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரனிடம் இதுதொடர்பாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் புகார் கொடுத்துள்ளனர். புகார் கொடுத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராம.சிவசங்கர்,

தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் செயலை செய்துள்ளார் நித்தியானந்தா. இந்து சாமியார் என்கிற போர்வையில் இந்து மதத்தை அவமதிக்கிறார்.

இந்த நித்தியானந்தா பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டிருப்பது தெரியவருகிறது. சாமியார் என்கிற போர்வையில் பல கோடிகளை சுருட்டி உள்ளார் நித்தியானந்தா. இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் அவரை கிரிமினல் வழக்கில் கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சாமியார் நித்தியானந்தா வழக்கறிஞர் தியாகராஜன் என்பவர் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில், சாமியார் நித்தியானந்தத்துக்கு முன் ஜாமீன் கேட்டும், தொலைக்காட்சியில் வெளிவரும் வீடியோ தடை செய்ய வேண்டும் என்றும் மனு அளித்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி மணிவாசகம், இந்த மனு மீதான விசாரணையை வரும் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தவுடன், வீடியோ காட்சிகளுக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டார்

ரஞ்சிதா 1992ல் பாரதி ராஜா இயக்கிய நாடோடி தென்றல் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். விஜயகாந்துடன் பெரிய மருது, சத்யராஜுடன் அமைதிப்படை, அர்ஜுனுடன் கர்ணா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றும் ராகேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து திடீரென்று சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கணவருடன் சந்தோஷமாக குடும்பம் நடத்திய அவர் சமீபத்தில் மீண்டும் சினிமாவுக்கு வந்தார்.

மணிரத்னம் இயக்கும் ராவணன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தெற்கத்தி பொண்ணு டி.வி. தொடரிலும் நடித்தார்.

கணவருடன் மோதல் என்றும் பணக்கஷ்டத்தில் இருக்கிறார் என்றும் அதனால்தான் நடிக்க வந்துள்ளார் என்றும் அவரைப்பற்றி செய்திகள் வெளியாயின. இதற்கு பதில் அளித்து ரஞ்சிதா கூறும்போது, எனது கணவருடன் சண்டையும் இல்லை. எனக்கு பணக்கஷ்டமும் இல்லை. கணவர் சம்மதத்தோடுதான் நடிக்க வந்தேன். வில்லி வேடங்களில் கூட நடிக்கத்தயாராக இருக்கிறேன் என்றார்.

தியாகராய நகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் ரஞ்சிதா வசித்து வந்தார். சில வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதன் மூலம் மாதம் ரூ. 30 ஆயிரம் வரை வாடகை வருவதாக கூறப்படுகிறது.


இந்நிலையில்தான் சுவாமி நித்தியானந்தாவுடன் ரஞ்சிதா உல்லாசமாக இருப்பது போன்று பரபரப்பான படங்கள் வெளிவந்துள்ளன.

வீடியோ படங்கள் பற்றி கருத்து கேட்க அவரை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது. வீடும் பூட்டி கிடக்கிறது. அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2ஆம் தேதி இச்செய்தி வெளியானதில் இருந்து நித்தியானந்தாவும் தலைமறைவாகிவிட்டார்.

நித்யானந்தரும் இப்போது தலைமறைவாகியுள்ள நிலையில் இருவரும் சேர்ந்து வெளிமாநிலத்துக்கு ஓடிப் போய்விட்டதாக பெங்களூரில் உள்ள ஆஸ்ரம ஊழியர் ஒருவரே கூறியுள்ளார். இந்த செக்ஸ் வீடியோக்கள் வெளியானபோது, நித்யானந்தர் தனது பெங்களூர் ஆசிரமத்தில்தான் இருந்தாராம். ஆனால் நிலைமை மோசமாவதை உணர்ந்து எஸ்கேப் ஆகிவிட்டாராம்.


அவரும் ரஞ்சிதாவும் பத்ரிநாத்தில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வழக்கமாக வெளிநாடு பயணம் போகும்போது ரஞ்சிதாவையும் அழைத்துச் செல்வாராம் நித்யா. இப்போதும் அதே பாணியில் அழைத்துச் சென்றிருக்கலாம் என்கிறார்கள்


பிரபல சாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இருவரும் ஒரு அறையில் உள்ளனர். அது ஆசிரமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். அந்த அறையில் புடவையுடன் இருக்கும் நடிகை ரஞ்சிதா சாமியாருடன் நெருக்கமாக படுக்கையில் புரளும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. பின்னர் விளக்குகள் அணைக்கப்படுகின்றன.

இதேபோல் அடுத்தக் காட்சியில் நடிகை ரஞ்சிதா சுடிதாரில், சாமியார் இருக்கும் அறைக்கு வருகிறார். அப்போது ரஞ்சிதா மாத்திரை கொடுக்கிறார், காபி கொடுக்கிறார். பின்னர் பழையபடி விளக்குகள் அணைக்கப்படுகின்றன. இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது நடிகைக்கும், சாமியாருக்கும் பல வருடங்களாகவே தொடர்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்படுகிறது.

திருவண்ணாமலையில் பிறந்த ராஜசேகரன் என்ற நித்தியானந்த சாமியார், திருவண்ணாமலை, பெங்களூர் போன்ற இடங்களில் ஆசிரமங்கள் நடத்தி வருகிறார். தற்போது வெளியாகி உள்ள இந்த வீடியோ காட்சிகள் இவரது ஆசிரமத்துக்கு சென்று வரும் பக்தர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About this blog

My Blog List

Pages

Followers

Blog Archive

Blog Archive