லண்டன்:அமெரிக்காவில், விந்து தானம் அளித்தவர் மூலம் பிறந்த குழந்தைகள் இதய நோயால் பாதிக்கப் பட்டுள்ளன.ரத்த வங்கிகள் போல விந்து வங்கிகள் வெளிநாடுகளில் அதிகம் உள்ளன. விந்து தானம் செய்பவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும். அமெரிக்காவில் 23 வயது நபரிடமிருந்து பெறப்பட்ட விந்து மூலம் 24 குழந்தைகள் பிறந்தன. இதில், ஒன்பது குழந்தைகளுக்கு பாரம்பரியமாக வரும் இதய நோய் கண்டறியப் பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் இறந்து விட்டன. மற்ற குழந்தைகள் வளர்ந்து ஏழு முதல் 16 வயதை அடைந்துள்ளன. இந்த குழந்தைகளும் இதய நோயால் எப்போது வேண்டுமானால் இறக்கலாம், என்ற சூழ்நிலையில் உள்ளனர். இதனால், மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதய தசைகளை கடினமாக்கும் "ஹைபர் டிராபிக் கார்டியோ மையோபதி' என்ற இந்த நோய் ஒரு சிலருக்கு மட்டுமே வரக்கூடியது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர் மூலம் எடுக்கப்பட்ட விந்து மூலம் பிறந்த குழந்தைகளையும் இந்நோய் பாதித்துள்ளது. எனவே, இனி விந்து தானம் செய்பவருக்கு, அனைத்து உடல் பரிசோதனைகளை மேற்கொண்ட பின் தான் விந்து பெறப்பட வேண்டும், என்ற விதிமுறையை பிரிட்டன் மருத்துவத்துறை உருவாக்கியுள்ளது. இவ்வளவு கெடுபிடிகள் விதிக்கப்பட்டால், விந்து தானம் செய்ய முன்வருபவர்களின் எண்ணிக்கை குறையும் என்ற கருத்தும் உள்ளது.
காதல் மனைவியை அழகூட்ட, எட்டு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்தார் டாக்டர் கணவர். இந்த அறுவை சிகிச்சைகளை அவரே தன் வருங்கால மனைவிக்கு செய்தார்.ஜெர்மனியை சேர்ந்த புகழ் பெற்ற பிளாஸ்டிக் சர்ஜன் ரெசா வொஸாவ்(48). இவரின் காதலி கேனி; 33 வயதான இவர் ஓட்டல் பணிப்பெண்; திருமணம் செய்து கொள்ளுமுன், வருங்கால மனைவியை அழகியாக்க வேண்டும் என்று தீர்மானித்தார் டாக்டர் காதலன். தேவையில்லாமல் அதிக சதை போட்ட இடுப்பு, தொடை, வயிறு போன்ற பகுதிகளில் அடிக்கடி "போடக்ஸ்' ஊசி மருந்தை செலுத்தி, பருமனை குறைத்தார். மார்பகத்தை பெரிதாக்க , "சிலிகான்' பஞ்சை பொருத்தினார்.இதுபோலவே, உதடு, கன்னம், நெற்றி, புருவங்கள் போன்ற இடங்களிலும் பேஷன் அறுவை சிகிச்சைகளை செய்தார். சதைப்பற்றை குறைக்க மட்டும், இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்தார். மற்ற இடங்களில் கத்தியின்றி, ரத்தமின்றி அறுவை சிகிச்சை செய்தார். ஐந்தாண்டு வரை இந்த அறுவை சிகிச்சைகள் தொடர்ந்தன. அதன் பின் தான், கேனியை அவர் மணந்து கொண்டார். "கேனியை நான் ஓட்டலில் முதன் முதலில் பார்த்தபோது அவள் மிகவும் குண்டாக இருந்தாள். ஆனால், ஏதோ கவர்ச்சி காணப்பட்டது. பேஷன் மருத்துவரான நான், அவள் உடலில் சில முக்கிய பாகங்களில் அறுவை சிகிச்சை செய்தால் எப்படியிருப்பாள் என்று கற்பனை செய்து பார்த்தேன். மகா அழகியாகி விடுவாள் என்று தோன்றியது. என் அறுவை சிகிச்சைகளுக்கு அவளும் ஒத்துழைத்தாள். அதனால் தான் இன்று பேரழகியாக இருக்கிறாள்; மாடல் அழகியாகவும் வலம் வருகிறாள்' என்று டாக்டர் வொஸாவ் தெரிவித்தார்.
‘கம்பிக்குள் கூச்சம்’ என்று வேண்டுமானால் கட்டுரை எழுதலாம் புவனேஸ்வரி. அந்தளவுக்கு நொந்து போனாராம் சிறைச்சாலையில். வெளியில் வந்த அவர் நடிகர் சங்கத்தில் நேரில் விளக்கமளிக்க முயன்றார் என்றும், பொறுங்கள் பேசலாம் என்று அங்கிருந்து பதில் வந்ததாகவும் தகவல்.
இப்போதெல்லாம் தனது நேரத்தில் பெரும்பாலும் பக்தி மார்க்கத்தில் கழிக்கிறாராம். மாலை நேரமானால் நேராக கோவிலுக்கு செல்லும் அவர், வீட்டிலும் பக்தி சிந்தனையோடுதான் இருக்கிறார் என்கிறது அவரது நெருங்கிய வட்டாரங்கள்.
அவரது இமேஜ் அதல பாதாளத்தில் சரிந்து கிடப்பதால் (ஏதோ இப்போதுதான் என்கிற மாதிரி…) அதிகம் அப்செட் ஆகியிருப்பவர் பாரதிராஜாதான். இவர் கலைஞர் டிவியில் இயக்கி வரும் தெக்கத்திபொண்ணு சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் புவனேஸ்வரி. இந்த கேரக்டரில் முன்பு ரஞ்சிதா நடித்து வந்தார். அவரை நீக்கிவிட்டுதான் இவரை ஒப்பந்தம் செய்தார் ராஜா. சிறைக்குள் சென்று திரும்பி வந்திருக்கும் அவரை தொடர்ந்து தனது சீரியலில் நடிக்க வைப்பதா? அல்லது அவருக்கு பதில் இவர் என்று வேறு யாரையாவது நடிக்க வைப்பதா? யோசித்துக் கொண்டிருக்கிறாராம். ஆனால் இரண்டையுமே எதிர்கொள்ள தயாராக இருக்கிறாராம் புவனேஸ்வரி.
பாரம் து£க்குற குதிரைக்கு பல்லு வலின்னாலும், சும்மா விடுவானா குதிரைக்காரன்?
