"இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளது'' என, சவுரப் திவாரி தெரிவித்துள்ளார். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 15 ம் தேதி இலங்கையில் துவங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணி நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது. இதில், சமீபத்தில் நடந்த ஐ.பி.எல்., தொடரில் அசத்திய சவுரப் திவாரி வாய்ப்பு பெற்றுள்ளார். ஜார்க்கண்டை சேர்ந்த 20 வயது இளம் வீரரான திவாரி, தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய "ஏ' அணிக்காக விளையாடி வருகிறார்.

தோனிக்குப் பின், ஜார்க்கண்ட மாநிலத்திலிருந்து இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார் சவுரப் திவாரி. கடந்த 2009 ம் ஆண்டு ஜார்க்கண்ட் அணி சார்பில் ரஞ்சி கோப்பையில் பங்கேற்ற சவுரப் திவாரி, 5 போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் விளாசினார். அதற்குப் பின் மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்ற திவாரி, 419 ரன்கள் எடுத்து அசத்தினார். மேற்கண்ட செயல்பாடுகளின் அடிப்படையில் திவாரிக்கு, ஆசிய கோப்பை அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.




















Gopika gives birth to baby girl in Ireland
ஆட்டோகிராப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கோபிகா. கனா கண்டேன், தொட்டி ஜெயா, எம்டன் மகன் உட்பட பல தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். கோபிகா, மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதே திருமணம் செய்து கொண்டார். அவருடைய கணவர் அகிலேஷ் அயர்லாந்தில் டாக்டராக இருக்கிறார். 2008ம் ஆண்டு ஜூலை 27ம்தேதி இவர்கள் திருமணம் கேரளாவில் நடந்தது. திருமணத்துக்கு பின் கோபிகா, கணவருடன் அயர்லாந்தில் குடியேறினார். திருமணத்துக்கு பிறகு அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் 2 மலையாள படங்களில் நடித்தார். அதன் பின்னர் கர்ப்பமானதால் அயர்லாந்துக்கே சென்று விட்டார்.

இந்நிலையில் கோபிகாவுக்கு அயர்லாந்தில் கணவர் அகிலேஷ் பணிபுரியும் மருத்துவமனையிலேயே அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக கோபிகாவின் கணவர் டாக்டர் அகிலேஷ் தெரிவித்துள்ளார்












புதுடில்லி: மூன்றாவது ஐ.பி.எல்., தொடர் முதல் பாதி முடிவடைந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி அசத்தலாக செயல்பட்டுள்ளது.


மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் போட்டிகளில் விளையாடுமாறு அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்தது 8 போட்டிகளில் வெற்றி பெறும் 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.


மும்பை அசத்தல்: இந்த முறை சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அசத்தி வருகிறது. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இனி விளையாட உள்ள 7 போட்டிகளில் 2 ல் மட்டும் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறி விடும். தற்போதைக்கு அரையிறுதி வாய்ப்பை கிட்ட தட்ட உறுதி செய்துள்ள ஒரே அணி மும்பை தான். கடந்த முறை (2009) 7 வது இடத்தை பெற்று ஏமாற்றம் அளித்த மும்பை அணி, இம்முறை சச்சின், சவுரப் திவாரி, ராயுடு, போலார்டு, பிராவோ, மலிங்கா, ஜாகிர், ஹர்பஜன் என வலுவான கூட்டணியுடன் ஐ.பி.எல்., தொடரில் சாதிக்க காத்திருக்கிறது மும்பை அணி.


யாருக்கு வாய்ப்பு?: அரையிறுதிக்கு முன்னேறும் மற்ற மூன்று அணிகள் எவை என்பதில் இழுபறி நீடிக்கிறது. தற்போதைய நிலையில் 2 வது இடத்தில் உள்ள டில்லி அணிக்கு (8 போட்டி 5 வெற்றி), அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பெங்களூரு (7 போட்டி 4 வெற்றி), ராஜஸ்தான் (8 போட்டி 4 வெற்றி), கோல்கட்டா (8 போட்டி 4 வெற்றி)அணிகளும் அரையிறுதிக்கு முன்னேற கடுமையாகப் போராடி வருகின்றன.


சென்னை எழுச்சி: ஐ.பி.எல்., தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு (8 போட்டி 3 வெற்றி) நேற்று முன் தினம் பெங்களூரு அணிக்கு எதிராக வெற்றி பெற்று பார்முக்கு திரும்பியுள்ளது. இந்த அணி, அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால், இனி விளையாட உள்ள 6 லீக் போட்டிகளில் 5 ல் கட்டாய வெற்றி பெற்றாக வேண்டும். டெக்கான் அணியும், நெருக்கடியான நிலையிலேயே உள்ளது. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 6 தோல்விகளை பெற்றுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, அரையிறுதி வாய்ப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Top world news stories and headlines detail

பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பது பற்றிய இரண்டாம் கட்ட, 'பிக் பாங்' (பெருவெடிப்பு) பரிசோதனை வெற்றியடைந்துள்ளது.'அணுக்கள் ஒன்று திரண்டு ஒரு பந்து போல இருந்த போது, அதில் திடீரென ஏற்பட்ட பெரிய வெடிப்பினால் அந்த அணுக் கூட்டம் சிதறி பரவ ஆரம்பித்தது. அதனால் ஏற்பட்டதே இந்த பிரபஞ்சம். இப்போதும் அந்த வெடிப்பினால் இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.


குறிப்பிட்ட சில கோடி ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் இந்த பிரபஞ்சம் பழைய நிலைக்கு அதாவது மீண்டும் ஒன்று திரண்டு விடும்' என்பது தான், நவீன அறிவியலில் இந்த பிரபஞ்சம் தோன்றியதற்கு கூறும் காரணம். இந்தக் கொள்கை புதிய அறிவியலில், 'பிக் பாங் தியரி' (பெருவெடிப்புக் கொள்கை) எனப்படும்.இந்த பெருவெடிப்புக் கொள்கையைப் பரிசோதிப்பதற்காக, பிரான்ஸ் - சுவிட்சர்லாந்து எல்லையில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில், அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பியக் கூட்டமைப்பான, 'செர்ன்' (சி.இ.ஆர்.என்.,), பூமிக்கடியில் 27 கி.மீ., அளவில் ராட்சத சுரங்க வடிவிலான ஒரு பரிசோதனைக் கூடத்தை அமைத்துள்ளது. காந்த ஈர்ப்பு முறையில் அமைந்த இதில், அணுக்கள் மோதும் போது ஏற்படும் பிரம்மாண்ட சக்தி மதிப்பிடப்படும்.


இந்தக் கூடம், 'லார்ஜ் ஹெட்ரான் கொலைடர்' எனப்படும். கடந்த ஆண்டில், இந்தக் கூடத்தில் பெருவெடிப்புக் கொள்கையின் அடிப்படையில் அணுக்களில் உள்ள துகள்களை மோதவிட்டு முதற்கட்டப் பரிசோதனை நடத்தப்பட்டது.இந்நிலையில், புதிய அறிவியலில் பிரபஞ்சத் தோற்றம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதத்தில் இரண்டாம் கட்ட சோதனை நடந்தது. அந்தச் சோதனை வெற்றியடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதைத் தொடர்ந்து, 'செர்ன்' அமைப்பின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள், சோதனை வெற்றியடைந்ததைக் கொண்டாடும் வகையில் பலமாகக் கைதட்டினர்.


இந்த வெற்றி, புதிய அறிவியலில் இயற்பியல் துறையில் பல்வேறு புதிய பரிமாணங்களை வளர்க்கும் என்று நம்பப்படுகிறது. ஒரே நாளில் இதற்கான விடை தெரியாது. காலப்போக்கில் அணுக்கூறுகள் மோதும் போது ஏற்படும் சக்திகள் குறித்த ஆய்வின் முடிவில், பிரபஞ்சம் பற்றிய அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்படும். வரலாற்றுப் பூர்வமான பிரம்மாண்டமான தகவல் சேகரிப்பு இதன் மூலம் துவங்கியது என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர் .

Free marital sex : kushboo interview
திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வது தவறு இல்லை என்று குஷ்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. நடிகை குஷ்பு 2005ம் ஆண்டு இந்தியா டுடே இதழுக்கு அளித்த பேட்டியில் திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் குறித்து விரிவாக பேசியிருந்தார். அவரது பேச்சு அன்றைய தினம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இருப்பினும் தனது கருத்தில் விடாப்பிடியாக இருந்த குஷ்பு, இதுதொடர்பான வழக்கை சந்தித்து வந்தார். குஷ்பு பேச்சு சரியா, தவறா? என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு பிரச்னை ‌பூதாகரமாக வெடித்தது.

அப்படி என்னதான் பேசினார் குஷ்பு? இதோ முழு விவரம்:-

பெண்கள் தங்கள் செக்ஸ் விருப்பங்களை வெளியிடுவதில் பெங்களூரை விட சென்னை பின் தங்கியிருந்தது. இப்போது சென்னை பெண்களும் செக்ஸ் பற்றிய மனத்தடைகளை கடந்து வருகின்றனர். செக்ஸ் பற்றி பெண்கள் வெளிப்படையாக பேச முடிகிறது. ஒரு பெண் தனது பாய் பிரண்ட் பற்றி உறுதியாக இருக்கும்போது அதை தன் பெற்றோரிடம் சொல்லலாம். தங்களது பெண் சீரியஸான ஒருஉறவை வைத்திருக்கும்போது அதை பெற்றோர் அனுமதிக்க வேண்டும்.

ஒரு பெண் திருமணம் ஆகும்போது அவள் கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம்விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண் மகனும், தான் திருமணம் செய்யப் போகும் பெண் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும் பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

நான் காதலித்த நபரையே திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் எங்கள் உறவு குறித்து நிச்சயமாக இருந்ததால் திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழ்ந்தோம். இப்போது எங்களுக்கு இரண்டு குழந்தைகள். குழந்தைகள் எங்களுடனேயே தூங்குவதால் எங்களுக்கென்று நாங்கள் தனியாக நேரத்தை ஒதுக்க வேண்டிருக்கிறது. மண வாழ்வில் ஈடுபடும் பெண்ணும் ஆணும் ஒருவருக்கு ஒருவர் உடல்ரீதியாகவும் மகிழ்ச்சியளிக்க வேண்டும். ஒருவரை ஒருவர் முழுமையாக திருப்தியடைய செய்வதுதான் ஆனந்தம். சில தம்பதிகள் செக்ஸ் புத்தகங்கள், படங்களைப் பார்த்து இன்பத்தை பெருக்கிக் கொள்கின்றனர். அதை தவறு என்று சொல்ல முடியாது. பெண்கள் தங்கள் செக்ஸ் விருப்பங்களைப் பேசினால் அவர்களைத் தவறானவர்களாகப் பார்க்கும் ஆண்களின் கண்ணோட்டம் மாறவேண்டும்.

இவ்வாறு குஷ்பு கூறியிருந்தார்.

குஷ்பு இந்த பேட்டி மூலம் தமிழ் கலாச்சாரத்தையும், தமிழ் பெண்களையும் இழிவு படுத்தி விட்டார், அவமானப்படுத்தி விட்டார் என்று பல பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. குஷ்புவுக்கு எதிராக பல போராட்டங்கள் நடந்தன. குஷ்புவை தமிழ்நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்றெல்லாம் கோஷமிடப்பட்டன.

குஷ்பு பேசியது சரியா, தவறா? அவரது பேச்சு கலாச்சாரத்துக்கு எதிரானதா, இல்லையா? என்பது குறித்த வழக்கில்தான் சுப்ரீம்கோர்ட் அதிரடி தீர்ப்பை வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.




Top world news stories and headlines detail

சென்னை : யுவராஜ் சிங் தனக்கு தம்பி மாதிரி என, பஞ்சாப் அணியின் உரிமையாளரும் பாலிவுட் நடிகையுமான பிரித்தி ஜிந்தா அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் 'மன்மதன்' என வர்ணிக்கப்படுபவர்யுவராஜ். இவரது வலையில் கிம் சர்மா முதல் தீபிகா படுகோனே வரை, நிறைய பாலிவுட் நட்சத்திரங்கள் சிக்கியுள்ளனர். இந்த முறை ஐ.பி.எல்., கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன்பதவியில் இருந்து நீக்கப் பட்டார். பின் புதிய கேப்டனாக சங்ககரா நியமிக்கப் பட்டார். இதனால் அதிருப்தியடைந்த யுவராஜ் கூறுகையில்,''அணியின் முக்கிய கேப்டன் பிரித்தி ஜிந்தா தான். கிரிக்கெட் தொடர்பாக நிறைய கற்றுக் கொண்டுள்ளார். ஒரு குடும்பம் போல அணியை பார்த்துக் கொள்கிறார். வீரர்களுக்கு சிறந்த உணவு, மற்றும் உரிய பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்கிறார். அனைவரும் சகோதரியாக பார்த்தாலும், நான் மட்டும் அப்படி நினைக்கவில்லை,'' என, நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

இதையடுத்து யுவராஜ்(28)-பிரித்தி ஜிந்தா(35) தொடர்பாக அதிகம்கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் மிகவும் நெருக்கமாகபழகுவதாக கூறப்பட்டது. இதனை கேட்ட பிரித்தி ஆவேசமடைந்தார்.

இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளில் பஞ்சாப் அணி தோல்வி அடைய, 'கட்டிப்புடி வைத்தியத்தை' கைவிட்ட இவர் கூறுகையில்,''தப்பா பேசாதீங்க ப்ளீஸ்... யுவராஜ் எனக்கு தம்பி மாதிரி. பஞ்சாப் அணி எனது குடும்பம் போன்றது. நாங்கள் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்கிறோம். அவ்வளவு தான்,''என்றார்

About this blog

My Blog List

Pages

Followers