Free marital sex : kushboo interview
திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வது தவறு இல்லை என்று குஷ்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. நடிகை குஷ்பு 2005ம் ஆண்டு இந்தியா டுடே இதழுக்கு அளித்த பேட்டியில் திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் குறித்து விரிவாக பேசியிருந்தார். அவரது பேச்சு அன்றைய தினம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இருப்பினும் தனது கருத்தில் விடாப்பிடியாக இருந்த குஷ்பு, இதுதொடர்பான வழக்கை சந்தித்து வந்தார். குஷ்பு பேச்சு சரியா, தவறா? என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு பிரச்னை ‌பூதாகரமாக வெடித்தது.

அப்படி என்னதான் பேசினார் குஷ்பு? இதோ முழு விவரம்:-

பெண்கள் தங்கள் செக்ஸ் விருப்பங்களை வெளியிடுவதில் பெங்களூரை விட சென்னை பின் தங்கியிருந்தது. இப்போது சென்னை பெண்களும் செக்ஸ் பற்றிய மனத்தடைகளை கடந்து வருகின்றனர். செக்ஸ் பற்றி பெண்கள் வெளிப்படையாக பேச முடிகிறது. ஒரு பெண் தனது பாய் பிரண்ட் பற்றி உறுதியாக இருக்கும்போது அதை தன் பெற்றோரிடம் சொல்லலாம். தங்களது பெண் சீரியஸான ஒருஉறவை வைத்திருக்கும்போது அதை பெற்றோர் அனுமதிக்க வேண்டும்.

ஒரு பெண் திருமணம் ஆகும்போது அவள் கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம்விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண் மகனும், தான் திருமணம் செய்யப் போகும் பெண் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும் பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

நான் காதலித்த நபரையே திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் எங்கள் உறவு குறித்து நிச்சயமாக இருந்ததால் திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழ்ந்தோம். இப்போது எங்களுக்கு இரண்டு குழந்தைகள். குழந்தைகள் எங்களுடனேயே தூங்குவதால் எங்களுக்கென்று நாங்கள் தனியாக நேரத்தை ஒதுக்க வேண்டிருக்கிறது. மண வாழ்வில் ஈடுபடும் பெண்ணும் ஆணும் ஒருவருக்கு ஒருவர் உடல்ரீதியாகவும் மகிழ்ச்சியளிக்க வேண்டும். ஒருவரை ஒருவர் முழுமையாக திருப்தியடைய செய்வதுதான் ஆனந்தம். சில தம்பதிகள் செக்ஸ் புத்தகங்கள், படங்களைப் பார்த்து இன்பத்தை பெருக்கிக் கொள்கின்றனர். அதை தவறு என்று சொல்ல முடியாது. பெண்கள் தங்கள் செக்ஸ் விருப்பங்களைப் பேசினால் அவர்களைத் தவறானவர்களாகப் பார்க்கும் ஆண்களின் கண்ணோட்டம் மாறவேண்டும்.

இவ்வாறு குஷ்பு கூறியிருந்தார்.

குஷ்பு இந்த பேட்டி மூலம் தமிழ் கலாச்சாரத்தையும், தமிழ் பெண்களையும் இழிவு படுத்தி விட்டார், அவமானப்படுத்தி விட்டார் என்று பல பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. குஷ்புவுக்கு எதிராக பல போராட்டங்கள் நடந்தன. குஷ்புவை தமிழ்நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்றெல்லாம் கோஷமிடப்பட்டன.

குஷ்பு பேசியது சரியா, தவறா? அவரது பேச்சு கலாச்சாரத்துக்கு எதிரானதா, இல்லையா? என்பது குறித்த வழக்கில்தான் சுப்ரீம்கோர்ட் அதிரடி தீர்ப்பை வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

0 comments:

Post a Comment

About this blog

My Blog List

Pages

Followers

Blog Archive

Blog Archive