Front page news and headlines today


"ஏமாற்று வித்தைக்காரர்களையும், பக்தி வேடம் பூண்டு பாமர மக்களை படுகுழியில் தள்ளுகிற பகல் வேடக்காரர்களையும் அவர்களிடம் பலியாகி சமுதாயத்தைச் சீரழிக்கிற சபல புத்தி உடையவர்களையும் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது,'' என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.


இது தொடர்பாக, முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பகுத்தறிவு பிரசாரம் பல்லாண்டுகளாக நடந்து வரும் போதும், சாமியார்கள் குறித்த தெளிவு மக்களிடம் இன்னும் ஏற்படாமலேயே உள்ளது. சமூக நலனிலும், கண்ணியத்திலும் அக்கறை காட்டுகிற ஒரு மக்கள் நல அரசு, கயமைத்தன சாமியார்களின் ஏமாற்று வித்தைகளை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. இதுபோன்ற குற்றங்கள் நடைபெறும் போது, அவை எப்படி நடத்தப்பட்டன, எங்கே, யாரால் நடத்தப்பட்டன, எந்த முறையில் நடத்தப்பட்டன என்பதை சான்றாக காட்ட, காட்டப்படும் படங்கள், செய்திகள் அளவுக்கு மீறி விடுகிறது. அவற்றை படங்களாக பார்த்திடும் இளையோர் நெஞ்சங்களில் எத்தகைய மாறுதல்கள் ஏற்படும் என்பதையும், அது இளைய சமுதாயத்தை எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்பதையும் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஏமாற்று வித்தைக்காரர்களையும், பக்தி வேடம் பூண்டு பாமர மக்களை படுகுழியில் தள்ளுகின்ற பகல் வேடக்காரர்களையும் அவர்களிடம் பலியாகி சமுதாயத்தைச் சீரழிக்கிற சபல புத்தி உடையவர்களையும் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்

0 comments:

Post a Comment

About this blog

My Blog List

Pages

Followers

Blog Archive

Blog Archive