ரஞ்சிதா 1992ல் பாரதி ராஜா இயக்கிய நாடோடி தென்றல் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். விஜயகாந்துடன் பெரிய மருது, சத்யராஜுடன் அமைதிப்படை, அர்ஜுனுடன் கர்ணா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றும் ராகேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து திடீரென்று சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கணவருடன் சந்தோஷமாக குடும்பம் நடத்திய அவர் சமீபத்தில் மீண்டும் சினிமாவுக்கு வந்தார்.
மணிரத்னம் இயக்கும் ராவணன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தெற்கத்தி பொண்ணு டி.வி. தொடரிலும் நடித்தார்.
கணவருடன் மோதல் என்றும் பணக்கஷ்டத்தில் இருக்கிறார் என்றும் அதனால்தான் நடிக்க வந்துள்ளார் என்றும் அவரைப்பற்றி செய்திகள் வெளியாயின. இதற்கு பதில் அளித்து ரஞ்சிதா கூறும்போது, எனது கணவருடன் சண்டையும் இல்லை. எனக்கு பணக்கஷ்டமும் இல்லை. கணவர் சம்மதத்தோடுதான் நடிக்க வந்தேன். வில்லி வேடங்களில் கூட நடிக்கத்தயாராக இருக்கிறேன் என்றார்.
தியாகராய நகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் ரஞ்சி
தா வசித்து வந்தார். சில வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதன் மூலம் மாதம் ரூ. 30 ஆயிரம் வரை வாடகை வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் சுவாமி நித்தியானந்தாவுடன் ரஞ்சிதா உல்லாசமாக இருப்பது போன்று பரபரப்பான படங்கள் வெளிவந்துள்ளன.
வீடியோ படங்கள் பற்றி கருத்து கேட்க அவரை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது. வீடும் பூட்டி கிடக்கிறது. அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2ஆம் தேதி இச்செய்தி வெளியானதில் இருந்து நித்தியானந்தாவும் தலைமறைவாகிவிட்டார்.
நித்யா
னந்தரும் இப்போது தலைமறைவாகியுள்ள நிலையில் இருவரும் சேர்ந்து வெளிமாநிலத்துக்கு ஓடிப் போய்விட்டதாக பெங்களூரில் உள்ள ஆஸ்ரம ஊழியர் ஒருவரே கூறியுள்ளார். இந்த செக்ஸ் வீடியோக்கள் வெளியானபோது, நித்யானந்தர் தனது பெங்களூர் ஆசிரமத்தில்தான் இருந்தாராம். ஆனால் நிலைமை மோசமாவதை உணர்ந்து எஸ்கேப் ஆகிவிட்டாராம்.
அவரும் ரஞ்சிதாவும் பத்ரிநாத்தில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வழக்கமாக வெளிநாடு பயணம் போகும்போது ரஞ்சிதாவையும் அழைத்துச் செல்வாராம் நித்யா. இப்போதும் அதே பாணியில் அழைத்துச் சென்றிருக்கலாம் என்கிறார்கள்

0 comments:
Post a Comment