ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ஆடி வரும் ஓரம் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளார். இன்னும் ஒரு மாதத்துக்கு அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர் கூறியுள்ளனர். எனவே வரும் 12-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டியில் அவர் விளையாட மாட்டார்.ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஓரம் விளையாடி வந்தார். சிறந்த ஆஸ்ரவுண்டரான அவர் அணியில் இடம் பெறாதது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறிது பின்னடைவை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவதற்காக ஆண்டு சுமார் ரூ. 3.37 கோடிக்கு ஓரம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்."வரும் அக்டோபரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேன், ஒருநாள் மற்றும் 20-20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன்' என்று ஓரம் அண்மையில் அறிவித்தார்

0 comments:
Post a Comment