
கொல்கத்தா, மார்ச் 4: சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கருத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இது குறித்து மேலும் கூறியது:சச்சின் தான் எப்போதும் பாரத ரத்னா. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பதில் எவருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கமுடியாது. அவரது சாதனைகளை கெüரவிக்கும் வகையில் அவருக்கு இந்த விருதை வழங்க வேண்டும். சுமார் 10 ஆண்டுகாலம் அவருடன் சேர்ந்து விளையாடியுள்ளேன்.அவரைப் போன்ற ஒரு வீரர் இந்தியாவுக்கு கிடைத்தது நம் அனைவருக்கும் பெருமை அளிக்கும் விஷயம் என்றார் செüரவ் கங்குலி.சானியா மிர்சா: கொல்கத்தா வந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கெüரவிக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்

0 comments:
Post a Comment